TNPSC Thervupettagam

HPWMI நபர்களுக்கான புதியக் கொள்கை – தமிழ்நாடு

March 3 , 2025 7 hrs 0 min 20 0
  • மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற நபர்களின் பராமரிப்பு மற்றும் அமலாக்கக் கட்டமைப்புக்கான 2024 ஆம் ஆண்டிற்கான மாநிலக் கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டு ள்ளார்.
  • மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற / சில வீடற்ற நபர்களுக்கு (HPWMI) வழங்கப்படும் சேவையை மீட்பு மற்றும் தீவிர நலப் பராமரிப்பு, இடைநிலை பராமரிப்பு, நீண்ட கால பராமரிப்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகிய நான்கு நிலைகளாக இக்கொள்கை வரையறுக்கிறது.
  • மீட்பு நடவடிக்கைகளில் பின்பற்ற வேண்டிய ஒரு சீர்தர இயக்க நடைமுறையை (SOP) இந்தக் கொள்கை முன்மொழிகிறது.
  • அத்தகைய நபர் 18 வயதுக்குட்பட்டவராக இருந்தாலோ, பெண் அல்லது கர்ப்பிணி மற்றும் ஏதேனும் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்தக் கொள்கை விவரிக்கிறது.
  • மாநில மனநல ஆணையத்தின் (SMHA) தலைமை நிர்வாக அதிகாரி, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை இணைக்க செய்வதற்கான அரசு முதன்மை அதிகாரியாக செயல்படுவார்.
  • மனநலம் பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களை மீட்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு உதவி எண்ணாக 102 செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்