சென்னை உயர்நீதிமன்றம் ஆனது, கோயில் வருமானம் மூலம் இந்து சமய அற நிலையத் துறையினால் (HR&CE) நிறுவப்பட்ட சுயநிதி கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலிப் பணியிடங்களுக்கு இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று கூறியுள்ளது.
அத்தகைய பணி நியமனம் பெற்றவர்கள், அவர்கள் இந்து மதத்தைக் கடைபிடிப்பதை நிறுத்திய தருணத்தில் இருந்து அந்தப் பதவியைத் துறந்ததாகக் கருதப்படுவர்.
எந்தவொரு அரசாங்க உதவியையும் பெறாத சுயநிதி நிறுவனம் ஆனது, பொது வேலை வாய்ப்பில் சமத்துவத்தை வழங்குவதற்காக, 'அரசு' என்ற சொல்லின் வரையறையின் கீழ் வராது.
மேலும், கோயில் நிதியில் நிறுவப்பட்ட சுயநிதிக் கல்லூரி மற்றும் அதன் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தின் மூலம் தனது தொடர்ச்சியான செலவுகளை ஈடுகட்டுவது அரசியலமைப்பின் 16(1) மற்றும் (2) சரத்துகளின் கீழ் வராது.
அதற்குப் பதிலாக அது குறிப்பிட்ட சில மத நிறுவனங்களில் மதத்தின் அடிப்படையில் நியமனம் செய்ய அனுமதிக்கும் 16(5) சரத்தின் கீழ் வரும்.