TNPSC Thervupettagam

HungerMap LIVE : உலகளாவியத் தகவல்கள் மற்றும் முக்கியப் போக்குகள்

September 20 , 2023 431 days 273 0
  • உலக உணவுத் திட்ட அமைப்பானது “HungerMap LIVE: உலகளாவியத் தகவல்கள் மற்றும் முக்கியப் போக்குகள்” என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இது கடுமையான பட்டினி நிலையின் முக்கியக் குறிகாட்டிகளைக் கண்காணிக்கும் நிகழ்நேரக் கண்காணிப்பு அமைப்பு ஆகும்.
  • இதில் வீடுகளில் உணவு நுகர்வு, வாழ்வாதாரம், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை, குழந்தை இறப்பு மற்றும் தூய்மையான குடிநீருக்கான அணுகல் ஆகியவை அடங்கும்.
  • உலகளாவியப் பிரச்சினையான பட்டினி நிலை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை 2015 ஆம் ஆண்டு முதல் ஆபத்தான முறையில் அதிகரித்து வருகிறது.
  • இந்தப் போக்குகள் பெருந்தொற்று, மோதல்கள், பருவநிலை மாற்றம் மற்றும் உள்ளார்ந்த ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட காரணிகளின் கலப்பினால் தீவிரம் அடைகின்ற நிலையில் இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கான காரணியாக அமைகின்றது.
  • இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளின்படி, உலகளவில் 828 மில்லியன் பேர் நாள் பட்ட பட்டினி நிலையில் உள்ளனர்.
  • 53 நாடுகளில் 193 மில்லியன் பேர் கடுமையான பட்டினி நிலையை எதிர் கொள்ளச் செய்கின்றனர்.
  • 12 நாடுகளில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கையில் 33% பேர் போதிய உணவு உட்கொள்ளாத நிலையில் உள்ளனர் .
  • சோமாலியா, ஆப்கானிஸ்தான், சிரிய அரபுக் குடியரசு, நைஜர், மாலி, ஹைத்தி மற்றும் சில நாடுகளில் உணவுப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.
  • மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சிரிய அரபுக் குடியரசு, நமீபியா மற்றும் பிற நாடுகளில் சந்தைகளை அணுகுவதில் அதிக சவால்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்