உலக வானிலை அமைப்பின் நீரியல் நிலை மற்றும் கண்ணோட்ட அமைப்பு (HydroSOS) ஆனது மாதிரி உருவாக்கத்திற்கான தரவுப் பகுப்பாய்வுச் செயற்கருவிகளை வழங்கி உள்ளது.
தற்போதைய நீரியல் நிலை மற்றும் உலகின் அனைத்துப் பகுதிகளுக்குமான அவற்றின் சாத்தியமான எதிர்காலக் கண்ணோட்டத்தை மதிப்பிடும் திறன் கொண்ட ஒரு செயல் பாட்டு அமைப்பை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
HydroSOS என்பது தேசிய நீரியல் சேவைகள் ஆகியவற்றிலிருந்து நீரியல் நிலை மதிப்பீடுகள் மற்றும் கண்ணோட்டங்களை ஒருங்கிணைக்கிறது.
அரசு அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள், உதவி வழங்கீட்டு முகமைகள் மற்றும் பொது மக்கள் போன்ற பயனர்களுக்கு எளிதான, அணுகக் கூடிய நீரியல் தகவல்களை இந்த அமைப்பு வழங்குகிறது.