தில்லி மெட்ரோ இரயில் கழகமானது மெட்ரோவிற்காக உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட தகவல் தொடர்பு அடிப்படையிலான இரயில் கட்டுப்பாட்டு சமிக்ஞை தொழில்நுட்பமான “i-ATS” (Automatic Train Supervision) என்பதைத் தொடங்கி உள்ளது.
i-ATS என்பது இரயில் இயக்கத்தை மேலாண்மை செய்யும் கணினி அமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
இந்த முறையானது சில குறிப்பிட்ட நிமிடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் மெட்ரோ சேவைகள் போன்ற அதிக அடர்வான செயல்பாடுகளுக்கான தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்குகின்றது.
உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட i-ATS தொழில்நுட்பமானது, இது போன்ற தொழில்நுட்பத்தைக் கையாளும் அயல்நாட்டு வணிகர்கள் மீதுஇந்திய மெட்ரோக்கள் சார்ந்து இருப்பதை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும்.
இது பல்வேறு விநியோகஸ்தர்களின் சமிக்ஞை அமைப்புகள் மற்றும் இரயில் கட்டுப்பாட்டு அமைப்புடன் பணியாற்ற இருக்கின்றது.
கூடுதலாக, இது இந்திய இரயில்வேயில் அறிமுகப்படுத்துதலுக்குப் பொருந்தும்.