TNPSC Thervupettagam

i-ATS – தானியங்கி இரயில் கண்காணிப்பு

September 25 , 2020 1396 days 631 0
  • தில்லி மெட்ரோ இரயில் கழகமானது மெட்ரோவிற்காக உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட தகவல் தொடர்பு அடிப்படையிலான இரயில் கட்டுப்பாட்டு சமிக்ஞை தொழில்நுட்பமான “i-ATS” (Automatic Train Supervision) என்பதைத் தொடங்கி உள்ளது.
  • i-ATS என்பது இரயில் இயக்கத்தை மேலாண்மை செய்யும் கணினி அமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
  • இந்த முறையானது சில குறிப்பிட்ட நிமிடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் மெட்ரோ சேவைகள் போன்ற அதிக அடர்வான செயல்பாடுகளுக்கான தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்குகின்றது.
  • உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட i-ATS தொழில்நுட்பமானது, இது போன்ற தொழில்நுட்பத்தைக் கையாளும் அயல்நாட்டு வணிகர்கள் மீது  இந்திய மெட்ரோக்கள் சார்ந்து இருப்பதை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும்.
  • இது பல்வேறு விநியோகஸ்தர்களின் சமிக்ஞை அமைப்புகள் மற்றும் இரயில் கட்டுப்பாட்டு அமைப்புடன் பணியாற்ற இருக்கின்றது.
  • கூடுதலாக, இது இந்திய இரயில்வேயில் அறிமுகப்படுத்துதலுக்குப் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்