TNPSC Thervupettagam

i-help முன்னெடுப்பு

March 21 , 2019 1950 days 548 0
  • அஸ்ஸாம் மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியான முகேஷ் சாகு “i-help” என்ற ஒரு முன்னெடுப்பை குவஹாத்தியின் ஜனதா பவனில் அறிமுகப்படுத்தினார்.
  • இது அஸ்ஸாம் மாநிலத்தில் டிஜிட்டல் தேர்தல் குறித்த எழுத்தறிவை ஊக்குவிப்பதற்காக அஸ்ஸாம் மாநிலத்தின் பொதுச் சேவை மையங்கள் (CSC - Common Service Centres) மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் ஏற்படுத்தப்பட்டதாகும்.
  • CSC என்பது நாடெங்கிலும் காணப்படும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பல்வேறு சேவைகளை அளிக்கும் இணைய வசதி கொண்ட அணுகல் மையங்களாகும்.
  • இந்த முழுத் திட்டமும் அம்மாநிலத்தின் முறையான வாக்காளர்கள் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு (SVEEP - Systematic Voters Education and Electoral Participation) திட்டத்தின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது அந்த மாநிலத்தில் எந்தவொரு வாக்காளரும் விடுபட்டு விடாமல் இருப்பதை உறுதி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்