TNPSC Thervupettagam
June 23 , 2020 1491 days 581 0
  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான டாக்டர் ஹர்ச வர்தன் I-Lab (தொற்று நோய்க் கண்டறியும் ஆய்வகம்) என்ற ஒன்றை புதுதில்லியில் தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்தியாவில்  I-Lab தொடங்கப் படுவது இதுவே முதல்முறையாகும்.
  • இது மத்திய உயிரித் தொழில்நுட்பத் துறையினால் செயல்படுத்தப்பட உள்ளது. இது மத்திய உயிரித் தொழில்நுட்பத் துறையின் கோவிட் நோய் சோதனை மையங்கள் ஒன்றில் பொருத்தப்பட இருக்கின்றது.
  • I-Lab என்பது நாட்டின் ஊரகப் பகுதிகளில் அணுக  முடியாத பகுதிகளில் கோவிட் – 19 நோய்த் தொற்றிற்காக மாதிரிகளைச் சேகரித்து அவற்றைச் சோதனை செய்யப் பயன்படுத்தப் படும் ஒரு நடமாடும் சோதனை வசதியாகும்.
  • இந்தியாவில் சுகாதார நலத் தொழில்நுட்பங்களில் உள்ள இடைவெளியைக் களைவதற்காக ஆந்திரப் பிரதேச மருந்துத் தொழில்நுட்ப மண்டலம் (AMTZ - Andhra Pradesh Med-Tech Zone) மற்றும் மத்திய அறிவியல்/தொழில்நுட்பத் துறை ஆகியவை இத்திட்டத்திற்காக ஒன்றிணைந்துள்ளன.
  • AMTZ என்பது மருத்துவத் தொழில்நுட்பங்களுக்காக பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப் பட்டுள்ள ஆசியாவின் முதலாவது மருத்துவ உபகரண உற்பத்திச் சூழலமைப்பு ஆகும். இது இந்தியாவில் உள்ள பல்வேறு அமைச்சகங்களால் ஆதரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்