புதுதில்லியில் உள்ள மெட்ரோ பவனில் நடைபெற்ற “இந்தியன் மெட்ரோக்கள்: சிறப்பிற்காக கூட்டிணைதல்” (Indian Metros: Collaborating for Excellence) மீதான மாநாட்டின் போது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகமானது ஐ-மெட்ரோஸ் (I-Metros) அமைப்பைத் துவக்கி வைத்துள்ளது.
ஐ-மெட்ரோஸ் என்பது அனைத்து இந்திய மெட்ரோ இரயில் நிறுவனங்களின் (all Indian Metro Rail companies) சங்கமாகும்.
தங்களுடைய நிறுவன செயல்பாட்டில் சிறப்புத்துவத்தை வளர்ப்பதற்கு மெட்ரோ இரயில் தொழில்நுட்பம் தொடர்பான யோசனைகள் மற்றும் அனுபவங்களை இந்திய மெட்ரோ இரயில் நிறுவனங்கள் தங்களிடையே பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட சங்கமே ஐ-மெட்ரோஸ் ஆகும்.
“எவை மெட்ரோக்களை வெற்றிகரமாக மாற்றுகின்றன” (What makes Metros successful) என்ற தலைப்பின் மீதான ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் மீது உலக வங்கி, ரயில்வே மற்றும் போக்குவரத்து வியூக மையம் (Railway and Transport Strategy Centre-RTSC) மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி (Imperial College London) ஆகியவற்றால் வெளியிடப்படும் The Operator’s Story எனும் அறிக்கையும் இந்தக் கருத்தரங்கின் போது வெளியிடப்பட்டது.