TNPSC Thervupettagam
April 7 , 2018 2297 days 701 0
  • புதுதில்லியில் உள்ள மெட்ரோ பவனில் நடைபெற்ற “இந்தியன் மெட்ரோக்கள்: சிறப்பிற்காக கூட்டிணைதல்” (Indian Metros: Collaborating for Excellence) மீதான மாநாட்டின் போது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகமானது  ஐ-மெட்ரோஸ் (I-Metros)  அமைப்பைத் துவக்கி வைத்துள்ளது.
  • ஐ-மெட்ரோஸ் என்பது அனைத்து இந்திய மெட்ரோ இரயில் நிறுவனங்களின் (all Indian Metro Rail companies) சங்கமாகும்.
  • தங்களுடைய நிறுவன செயல்பாட்டில் சிறப்புத்துவத்தை வளர்ப்பதற்கு மெட்ரோ இரயில் தொழில்நுட்பம் தொடர்பான யோசனைகள் மற்றும் அனுபவங்களை இந்திய மெட்ரோ இரயில்  நிறுவனங்கள் தங்களிடையே   பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட சங்கமே ஐ-மெட்ரோஸ் ஆகும்.
  • “எவை மெட்ரோக்களை வெற்றிகரமாக மாற்றுகின்றன” (What makes Metros successful) என்ற தலைப்பின் மீதான ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் மீது உலக வங்கி, ரயில்வே மற்றும் போக்குவரத்து வியூக மையம் (Railway and Transport Strategy Centre-RTSC) மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி (Imperial College London) ஆகியவற்றால் வெளியிடப்படும் The Operator’s Story எனும் அறிக்கையும் இந்தக் கருத்தரங்கின் போது வெளியிடப்பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்