தமிழ்நாடு முதலமைச்சர் i-தமிழ்நாடு தொழில்நுட்ப (iTNT) மையத்தினை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
iTNT மையமானது, இந்த மாநிலத்தில் உள்ள சிக்கலான சவால்களைத் தீர்ப்பதற்காக செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் தொடர்சங்கிலித் தொழில் நுட்பங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்கும்.
இந்த மையமானது சென்னை அண்ணாப் பல்கலைக்கழக வளாகத்தில் 54.61 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசானது இதற்கு 50% நிதியை அளித்துள்ளது.
இதற்கு தமிழக அரசாங்கமானது 37 சதவீதமும் மற்றும் தொழில்துறைகள் 13 சதவீதமும் பங்களித்துள்ளன.