I2U2 குழுவின் கீழ் இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகியவை இணைந்து புதிய கூட்டு விண்வெளி முன்னெடுப்பினை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளன.
இது கொள்கை வகுப்பாளர்கள், நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு "தனித்துவமான விண்வெளி அடிப்படையிலான ஒரு கருவியை" உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
I2U2 நாடுகளின் குழுவானது ஒருசேர மேற்கு ஆசிய குவாட் நாடுகள் என குறிப்பிடப் படுவதோடு அவை அனைத்தும் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நாடுகளாகும்.