தோஹாவில் கூடிய சர்வதேசத் தடகள கூட்டமைப்புச் சங்கமானது (International Association of Athletics Federations - IAAF) மகளிர் பிரிவில் போட்டியிடும் திருநங்கை விளையாட்டு வீரர்களுக்குப் புதிய விதிகளை வகுத்துள்ளது.
பெண் திருநங்கை விளையாட்டு வீரர்கள் இந்தப் புதிய விதிமுறைகளின் கீழ், தங்கள் ஆண்மைக்கிளர்வி(testosterone) அளவைப் பாதியாகக் குறைக்க வேண்டும்.
“பெண் தடகள வீரர்” என்று ஒருவர் அறிவிக்கப்படுவதற்கு குறைந்தது 12 மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஆண்மைக்கிளர்வியின் செறிவானது ஒரு லிட்டருக்கு ஐந்து நானோமோல்களுக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
மேலும், ஒரு திருநங்கை விளையாட்டு வீரர் சட்டத்தால் “பெண்” என்று அங்கீகரிக்கப் பட வேண்டிய அவசியமில்லை.
அவரது பாலின அடையாளம் “பெண்” என்று கையொப்பமிடப்பட்ட ஒரு அறிவிப்பே போதுமானதாகும்.
பாலியல் வளர்ச்சி அல்லது ஹைபராண்ட்ரோஜனிசத்தின் வேறுபாடுகள் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கும் இதே போன்ற விதிகள் பொருந்தும்.