TNPSC Thervupettagam
January 8 , 2023 561 days 310 0
  • சர்வதேச காவல்துறைத் தலைவர்கள் சங்கம் ஆனது (IACP), சத்தீஸ்கர் காவல் துறையின் 'நிஜாத்' என்ற போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத முறையிலான மது விற்பனைக்கு எதிரான பிரச்சாரத்தினை நிறுவனம் சார்ந்த பிரிவில் 'குற்றத் தடுப்புக்கான தலைமைத்துவ விருதிற்காக' தேர்ந்தெடுத்துள்ளது.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில், காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் (BPR&D) ஆனது நாட்டின் முப்பது சிறந்த திறன்மிகு காவல்துறை இயக்கங்களில் ஒன்றாக நிஜாத் பிரச்சாரத்தையும் சேர்த்தது.
  • நிஜாத் என்பதன் பொருள் நீக்கம் அல்லது விடுதலை என்பதாகும்.
  • இந்தியக் காவல் பணி அதிகாரி சந்தோஷ் குமார் சிங் தலைமையில் சத்தீஸ்கர் காவல்துறையினரால் இந்த இயக்கமானது தொடங்கப்பட்டது.
  • சர்வதேச காவல்துறைத் தலைவர்கள் சங்கம் என்பது அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு சர்வதேச அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்