TNPSC Thervupettagam

IAU-ன் 24 மணி நேர ஆசியா மற்றும் ஓசீயானியா சாம்பியன்ஷிப்-2018

December 10 , 2018 2180 days 630 0
  • தைவானின் தைபேயில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான அதிவிரைவு ஓட்டத்திற்கான சர்வதேச மன்றத்தின் (IAU - International Association of Ultra Running) 24 மணி நேர ஆசியா மற்றும் ஓசீயானியா சாம்பியன்ஷிப் போட்டியில் உல்லாஸ் நாராயண் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • இவர் சர்வதேச அதிவிரைவு ஓட்டப் பந்தயப் போட்டியில் தனிநபராக பதக்கத்தை வென்ற முதலாவது இந்திய வீரராக உருவெடுத்துள்ளார்.
  • ஜப்பானைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீரர்களான யோசிஹிகோ இசிகாவா (253 கிலோ மீட்டர்) மற்றும் நொபுயூக்கி தக்காஹாசி (252 கிலோ மீட்டர்) ஆகியோருக்குப் பின்னால் இவர் போட்டியை நிறைவு செய்துள்ளார்.
  • இந்திய அணியைச் சேர்ந்த நாராயண், சுனில் சர்மா மற்றும் எல்.எல் மீனா ஆகியோர் தங்களது ஒட்டுமொத்த தொலைவான 644 கிலோ மீட்டரைக் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.
  • அணிகளுக்கானப் பிரிவில் 756 கிலோ மீட்டர் தொலைவை அடைந்து ஜப்பான் தங்கப் பதக்கத்தையும் 684 கிலோ மீட்டர் தொலைவை அடைந்து ஆஸ்திரேலியா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளன.
அதிவிரைவு ஓட்டம்
  • அதிவிரைவுப் போட்டியானது பாரம்பரியமான போட்டிகளில் உள்ள தொலைவைவிட மிக நீண்ட தொலைவையுடைய ஓட்டம் கொண்ட போட்டியாக இருக்கும்.
  • போட்டியாளர்கள் போட்டிப் பிரிவின் குறிப்பிட்ட தொலைவு அல்லது குறிப்பிட்ட நேரம் என்ற 2 வெவ்வேறு வகைகளில் பங்கேற்கிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்