தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் மற்றும் ஐடிபிஐ வங்கியின் முன்னாள் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான B. ஸ்ரீராம் ஆகியோர் இந்திய நொடித்தல் மற்றும் திவால் நிலை வாரியத்தின் (IBBI - Insolvency and Bankruptcy Board of India) பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
IBBI என்பது 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 01 அன்று உருவாக்கப்பட்ட ஒரு நொடித்தல் ஒழுங்குமுறை ஆணையமாகும்.
இதற்கு 2016 ஆம் ஆண்டின் நொடித்தல் மற்றும் திவால் நிலைச் சட்டத்தின் மூலம் சட்டப்பூர்வ அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
IBC (Insolvency and Bankruptcy Code) ஆனது தனிநபர்கள், நிறுவனங்கள், பங்காளர் நிறுவனங்கள் மற்றும் குறைவாக பொறுப்புள்ள பங்காளர் நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இது பின்வரும் 2 தீர்ப்பாயங்களைப் பயன்படுத்தி வழக்குகளைக் கையாளுகின்றது.
தேசிய நிறுவனச் சட்டத் தீப்பாயம் (National company law tribunal - NCLT)
கடன் மீட்புத் தீர்ப்பாயம் (Debt recovery tribunal - DRT).