TNPSC Thervupettagam

IBC தொடர்பான 4 அம்ச செயல் திட்டம்

March 28 , 2025 5 days 38 0
  • நிதித்துறைக்கான நிலைக்குழுவானது, மத்திய இயங்கலை தளம் மூலமான ஒரு தீர்வு காணல் திட்டங்களுக்கான நேரடிச் சமர்ப்பிப்பு முறையைச் செயல்படுத்துமாறு பெரு நிறுவன விவகார அமைச்சகத்திற்கு (MCA) உத்தரவிட்டுள்ளது.
  • இந்த நடவடிக்கையானது சமர்ப்பிப்பு செயல்பாட்டில் இரகசியத் தன்மையை உறுதி செய்வதையும், சில தரப்பினருக்கு மட்டும் செல்லும் சில தேவையற்றப் பலன்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 4 அம்சங்கள்:
    • தீர்வு காணல் திட்டங்களுக்கான நேரடிச் சமர்ப்பிப்பு முறையைச் செயல்படுத்தச் செய்தல்:
    • தீர்வு வழங்கீட்டு நிபுணர்களின் பங்கு மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துதல்;
    • வழக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு காலக்கெடுவை மிகவும் வெளிப்படையாகக் கண்காணித்தல் மற்றும்
    • கடன் வழங்குநர்கள் குழுவின் (CoC) கட்டமைப்பை மதிப்பாய்வு செய்தல்.
  • நொடிப்பு நிலை மற்றும் திவால்நிலைக் குறியீடு (IBC) திவால்நிலைத் தீர்வுக்கான காலக்கெடு மற்றும் கடன் வழங்குநர் சார்ந்த செயல்முறையை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நொடிப்பு நிலை என்பது தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் நிலுவையில் உள்ள தங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலையைக் குறிக்கிறது.
  • திவால்நிலை என்பது திவாலான, அதாவது தனது கடனை அடைக்க முடியாத ஒரு நபர் அல்லது நிறுவனத்திற்கு, தகுதி வாய்ந்த நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட சட்டப் பூர்வ அந்தஸ்து நிலையைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்