சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது (IIT - Madras) IBM குவாண்டம் வலையமைப்பில் இணைந்த முதல் இந்திய நிறுவனம் ஆகும்.
இது இந்தியாவில் குவாண்டம் கணினி முறை திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
IBM குவாண்டம் வலையமைப்பின் ஒரு உறுப்பினராக இருப்பதால், சென்னையின் இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் IBM நிறுவனத்தின் மிகவும் மேம்பட்ட குவாண்டம் கணினி அமைப்புகளுக்கு மேகக் கணிமை அடிப்படையிலான ஒரு அணுகலைப் பெறும்.
IBM குவாண்டம் வலையமைப்பு நமது ஆசிரியர்களுக்கு அதிநவீன குவாண்டம் வன் பொருள் மற்றும் மென்பொருள்களை நேரடியாக அணுகுவதற்கான ஒரு வாய்ப்பினை வழங்கும்.