வளரும் நாடுகளில் வறுமை எதிர்த்து போராடுவதற்காக இந்தியா, பிரேசில், தென்ஆப்ரிக்கா நாடுகள் “IBSA Trust Fund” எனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
தென்ஆப்ரிக்காவின் டர்பனில் நடந்த இப்சாவின் 8வது முத்தரப்பு அமைச்சரவை ஆணையத்தின் சந்திப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
மூன்று நாடுகளும் ஆண்டுதோறும் பத்து லட்சம் (1 மில்லியன்) அமெரிக்க டாலர்களை (USD) இந்நிதிக்கு வழங்க உள்ளது. ஐநா வளர்ச்சி திட்டத்தின் தெற்கு ஒத்துழைப்பிற்கான சிறப்பு பிரிவு இந்நிதியை நிர்வகிக்க உள்ளது.
இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சர்வதேச முத்தரப்பு பேச்சு வார்த்தை மன்றமாகும்.
இது "பிரேசிலியா பிரகடத்தின்" ஏற்பினை அடுத்து 2003 ல் செயல்முறைக்கு வந்தது.