இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த கீர்த்தனா பாண்டியன் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற IBSF (International Billiards and Snooker Federation) 16 வயதிற்குட்பட்டோருக்கான உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பில் பெண்களுக்கானப் பட்டத்தை வென்றார்.
இதன் இறுதிப் போட்டியில் பெலாரஸின் போட்டியாளரான ரிவல் அல்பினா லெட்சுக்கைத் தோற்கடித்து தனது முதல் சர்வதேசப் பட்டத்தை வென்றுள்ளார்.