TNPSC Thervupettagam

ICANN ccNSO சபையின் முதல் இந்திய உறுப்பினர்

August 7 , 2018 2307 days 694 0
  • நியமிக்கப்பட்ட பெயர்கள் மற்றும் எண்களுக்கான இணையதள குழுமத்தின் (Internet Corporation for Assigned Names and Numbers - ICANN) பரிந்துரைக் குழு, நாட்டின் குறியீட்டு ஆதரவு நிறுவனத்தின் (Country Code Supporting Organisation - CCNSO) புதிய சபை உறுப்பினராக அஜய் தத்தாவினை தேர்ந்தெடுத்துள்ளது.
  • இவர் CCNSO-ன் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் ஆவார்.
  • CCLTD (Country Code top-level domains) விவகாரங்கள் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் அனைத்து நாடுகளின் குறியீட்டு உயர்நிலை இயக்குநர்களை பிரதிநிதிப்படுத்துதல் ஆகியவற்றுக்கான ICANN- ன் கொள்கை மேம்பாட்டு அமைப்பு CCNSO ஆகும்.
  • இவர் இரண்டு வருட பதவிக் காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 2018ல் ஸ்பெயினில் நடைபெற உள்ள ICANN-ன் 63வது சந்திப்பில் இவர் பதவி ஏற்க உள்ளார்.
  • இவர் உலக அளவில் இந்தியாவிற்கான பிரதிநிதியாக இருப்பார். மேலும் ccNSO-ன் உறுப்பினராக ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகளின் பொறுப்பாளரும் ஆவார்.

Internet Corporation for Assigned Names and Numbers (ICANN)

  • இணையதளத்தில் களப் பெயரினை மேற்பார்வையிடுதலில் பொறுப்பு கொண்ட இலாப நோக்கமில்லாத (அரசு அல்லாத) தனியார் கழகம் ICANN ஆகும்.
  • இது 1998-ல் நிறுவப்பட்டது. அமெரிக்காவினைச் சேர்ந்த கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்ஜெல்ஸ் இதன் தலைமையிடமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்