ICAR-NISA ஆனது 1924 ஆம் ஆண்டில் ஜார்க்கண்டின் ராஞ்சியில் உள்ள இந்திய இயற்கை ரெசின்கள் (பிசின்கள்-குங்கிலியம்) மற்றும் பசைகள் ஆய்வுக் கல்வி நிறுவனமாக நிறுவப்பட்டது.
இது 2022 ஆம் ஆண்டில் ICAR-NISA என மறுபெயரிடப்பட்டு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இது முதன்மை வேளாண் பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மற்றும் தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் வேளாண் சுற்றுலா போன்ற தொடர்புடைய செயல்பாடுகளை உள்ளடக்கியது.
வேளாண் விளைபொருட்கள், எஞ்சியப் பொருட்கள மற்றும் துணை விளைப் பொருட்களை உணவு, தொழில்துறை மற்றும் மருத்துவப் பயன்பாட்டிற்கான உயர் மதிப்பு கொண்ட பொருட்களாக மாற்றும் செயல்முறைகள் இதில் அடங்கும்.