காஜல் சக்கரபோர்த்தி (Kajal Chakraborty) என்பவருக்கு 2020 ஆம் ஆண்டின் ICAR நார்மன் போர்லாக் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
இது வேளாண் ஆராய்ச்சித் துறைக்கான ஒரு சிறப்பு தேசிய விருதாகும்.
காஜல் சக்கரபோர்த்தி கொச்சியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் மத்தியக் கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் கடல்சார் உயிரித் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் ஒரு தலைமை அறிவியலாளர் ஆவார்.