RS-28 சர்மாட் (RS-28 Sarmat) எனும் தனது நவீன அணுசக்தி வல்லமையுடைய கண்டங்களுக்கிடையேயான ஏவுகணையை (Inter-Continental Ballistic Missile-ICBM) இரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
ஆர்டிக் மண்டலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பிளெஸேட்ஸ்க் காஸ்மோடிரோம் (Plesetsk Cosmodrome) எனும் மேற்கு இரஷ்யாவில் அமைந்துள்ள விண்வெளி தளத்திலிருந்து இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது.
உலகினுடைய எந்தப் பகுதியினையும் அடையும் திறன் கொண்டது இந்த ICBM RS-28 சார்மாட் ஏவுகணை. இந்த ஏவுகணை 2021 ஆம் ஆண்டு பாதுகாப்பு சேவையில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. RS-28 சர்மாட் ஏவுகணையானது ஓர் அதிக திரவ எரிபொருள் உந்துதலுடைய (heavy liquid-propellant) அணு ஆயுதங்களை ஏந்திச் செல்ல வல்ல கண்டங்களுக்கிடையேயான ஏவுகணையாகும்
1988 ஆம் ஆண்டு முதல் இரஷ்யாவின் ஒரே அதிநவீன பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணை அமைப்பாக உள்ள R-36M2 வோயேவோடா (R-36M2 Voyevoda) எனும் கண்டங்களுக்கிடையேயான ஏவுகணை அமைப்பை மாற்றுவதே இந்த சர்மாட் ஏவுகணை கண்டுபிடிப்பின் நோக்கமாகும்.
தற்போதைய ரஷ்யா, உக்ரைன், கஜகஸ்தான் நிலப் பிராந்தியங்களில் கி.மு . 6 ஆம் நூற்றாண்டு முதல் 4 ஆம் நூற்றாண்டு வரையிலானா இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த சர்மாட்டியன் எனும் நாடோடி பழங்குடியினர்களின் (Nomadic Sarmatian tribes) பெயர் கொண்டு அதன் அடிப்படையில் இந்த ஏவுகணைக்கு சர்மாட் (Sarmat) எனப் பெயரிடப்பட்டுள்ளது.