TNPSC Thervupettagam

ICBM சர்மாட் ஏவுகணை

April 15 , 2018 2289 days 649 0
  • RS-28 சர்மாட் (RS-28 Sarmat) எனும் தனது நவீன அணுசக்தி வல்லமையுடைய கண்டங்களுக்கிடையேயான ஏவுகணையை (Inter-Continental Ballistic Missile-ICBM) இரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • ஆர்டிக் மண்டலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பிளெஸேட்ஸ்க் காஸ்மோடிரோம் (Plesetsk Cosmodrome) எனும் மேற்கு இரஷ்யாவில் அமைந்துள்ள விண்வெளி தளத்திலிருந்து இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது.
  • உலகினுடைய எந்தப் பகுதியினையும் அடையும் திறன் கொண்டது இந்த ICBM RS-28 சார்மாட் ஏவுகணை. இந்த ஏவுகணை 2021 ஆம் ஆண்டு பாதுகாப்பு சேவையில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. RS-28 சர்மாட் ஏவுகணையானது ஓர் அதிக திரவ எரிபொருள் உந்துதலுடைய (heavy liquid-propellant) அணு ஆயுதங்களை ஏந்திச் செல்ல வல்ல கண்டங்களுக்கிடையேயான ஏவுகணையாகும்
  • 1988 ஆம் ஆண்டு முதல் இரஷ்யாவின் ஒரே அதிநவீன பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணை அமைப்பாக உள்ள R-36M2 வோயேவோடா (R-36M2 Voyevoda) எனும் கண்டங்களுக்கிடையேயான ஏவுகணை அமைப்பை மாற்றுவதே இந்த சர்மாட் ஏவுகணை கண்டுபிடிப்பின் நோக்கமாகும்.
  • தற்போதைய ரஷ்யா, உக்ரைன், கஜகஸ்தான் நிலப் பிராந்தியங்களில் கி.மு . 6 ஆம் நூற்றாண்டு முதல் 4 ஆம் நூற்றாண்டு வரையிலானா இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த சர்மாட்டியன் எனும் நாடோடி பழங்குடியினர்களின் (Nomadic Sarmatian tribes) பெயர் கொண்டு அதன் அடிப்படையில் இந்த ஏவுகணைக்கு சர்மாட் (Sarmat) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்