ICC அமைப்பின் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் 2024
January 28 , 2025 26 days 88 0
சர்வதேச கிரிக்கெட் சபையின் 2024 ஆம் ஆண்டிற்கான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா அறிவிக்கப்பட்டுள்ளார்.
ICC ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 2024 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த வீரராக ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ICC ஆடவர் T20I போட்டிகளில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த அணித் தலைவராக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ICC ஆடவர் T20I போட்டிகளில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை அர்ஷ்தீப் சிங் வென்றுள்ளார்.
ICC மகளிர் T20I போட்டிகளில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக அமெலியா கெர் (நியூசிலாந்து) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ICC ஆடவர் T20 போட்டிகளில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த அணியில் அர்ஷ்தீப் சிங் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
ICC மகளிர் T20 போட்டிகளில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த அணியில் ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டினைச் சேர்ந்த, மேலும் அந்த நாட்டிலிருந்து முதல்முறையாக, அசமதுல்லா ஓமராசி என்பவருக்கு 2024 ஆம் ஆண்டின் ICC ஆடவர் T20 ஒரு நாள் போட்டிகளின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது வழங்கப் பட்டது.