மேற்கிந்திய தீவுகளின் ஆன்டிகுவாவில் நடந்த இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தைத் தோற்கடித்து ஆஸ்திரேலியாவானது ICC மகளிர் டி20 உலக கோப்பையின் 6-வது பதிப்பை வென்றது.
இது ஆஸ்திரேலியாவின் 2010, 2012, 2014 ஆகிய வெற்றிகளைத் தொடந்த 4-வது உலகக் கோப்பை வெற்றியாகும்.
இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் அலிஸா ஹேலி சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.
2016ல் நடைபெற்ற கடந்த உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா மேற்கிந்திய அணிகளால் தோற்கடிக்கப்பட்டது.
இந்த உலகக் கோப்பையில் இந்தியா இங்கிலாந்து அணியிடம் அரையிறுதியில் தோல்வியுற்றது.
இந்திய அணித் தலைவர் ஹர்மன் ப்ரீத் கௌர், நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் சதம் அடித்து சர்வதேச T20 போட்டிகளில் இந்தியாவிற்காக சதம் அடித்த முதல் இந்தியப் பெண் வீரராகவும் ஐசிசி மகளிர் T20 உலக கோப்பைப் போட்டிகளில் எந்த ஒரு நாட்டைச் சேர்ந்தவராகவும் உள்ள வகையில் சதம் அடித்த மூன்றாவது நபராகவும் உருவெடுத்துள்ளார்.
இந்த சுற்றுப் பயணத்தில் 5 ஆட்டங்களில் 183 ரன்களுடன் இந்திய அணிக்காக அதிகம் ரன் அடித்தவர் இவராவார்.