TNPSC Thervupettagam
July 3 , 2018 2339 days 701 0
  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பிரம்மாண்டமான சாதனை படைத்ததற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ராகுல் டிராவிட் மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர் ரிக்கி பாண்டிங் ICC(International Cricket Council) வாழ்த்தரங்கத்தில் இடம் பெற்றுள்ளனர்.
  • டப்ளினில் நடைபெற்ற விழாவின் பொழுது, டிராவிட் மற்றும் பாண்டிங் ஆகியவர்களுடன் இங்கிலாந்தை சேர்ந்த ஓய்வுபெற்ற விக்கெட்-கீப்பர் மற்றும் மட்டைப்பந்து வீரரான க்ளேர் டெய்லா எனும் பெண்ணும் ICC வாழ்த்தரங்கத்தில் இடம் பெற்றுள்ளார்.
  • உயரடுக்குப் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட ஐந்தாவது இந்திய ஆட்டக்காரர் டிராவிட் ஆவார்.
  • மற்ற நான்கு இந்திய அணித்தலைவர்கள் - பிஷன் சிங் பேடி, சுனில் காவஸ்கர். கபில்தேவ், அனில் கும்ப்ளே.
  • பாண்டிங், இந்த மரியாதையைப் பெரும் 25-வது ஆஸ்திரேலிய வீரர் ஆவார்.
  • ICC கிரிக்கெட் வாழ்த்தரங்கம், சிறந்த ஆட்டக்காரர்களின் சாதனையை கிரிக்கெட்டின் நீண்ட மற்றும் சிறப்புமிக்க வரலாற்றின் மூலம் அடையாளம் காணுகிறது.
  • 2 ஜனவரி, 2009ல் துபாயில் நடைபெற்ற ICC-யின் நூற்றாண்டு விழாவின் ஒருபகுதியாக சர்வேதேச மட்டைப் பந்தாளர்கள் கூட்டமைப்புடன் சேர்ந்து சர்வதேச மட்டைப்பந்து குழுமத்தினால் (Federation of International Cricketer’s Association) ICC வாழ்த்தரங்கமானது தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்