TNPSC Thervupettagam
December 20 , 2019 1682 days 569 0
  • சர்வதேச கிரிக்கெட் மன்றமானது (International Cricket Council - ICC) 2019 ஆம் ஆண்டின் ICC விருதுகளை அறிவித்துள்ளது.
  • இது முந்தைய 12 மாதங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களை அங்கீகரித்து, அவர்களை கௌரவிப்பதற்கான விளையாட்டு விருதுகளின் தொகுப்பாகும்.
  • இந்திய மகளிர் கிரிக்கெட் வீரரான ஸ்மிருதி மந்தனா என்பவர் ICC பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி (சர்வதேச ஒருநாள்) மற்றும் டி20 (இருபது இருபது) ஆகிய இரண்டு பிரிவுகளிலும் ஆண்டின் சிறந்த மகளிர் வீராங்கனையாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • இந்த ஆண்டின் டி20 அணிப் பட்டியலில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த பிற சிறந்த மகளிர் வீராங்கனைகள் தீப்தி சர்மா மற்றும் ராதா யாதவ் ஆகியோர் ஆவர்.
  • இந்த ஆண்டின் ஒருநாள் கிரிக்கெட் அணிப் பட்டியலில் ஷிகா பாண்டே, ஜுலான் கோஸ்வாமி மற்றும் பூனம் யாதவ் ஆகியோர் இந்தியாவைச் சேர்ந்த பிற சிறந்த வீராங்கனைகளாகத்  தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்