2019 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று சர்வதேசக் கிரிக்கெட் ஆணையத்தினால் (International Cricket Council - ICC) ஜிம்பாவே கிரிக்கெட் அணி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
நேர்மையான மற்றும் மக்களாட்சித் தேர்தலை அளிக்கத் தவறியதற்காகவும் கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசின் தலையீடு இல்லாமையை உறுதி செய்யத் தவறியதற்காகவும் ஜிம்பாவே கிரிக்கெட் அணி நீக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாவே அணி எந்தவொரு ICC போட்டித் தொடரிலும் விளையாட அனுமதிக்கப்படாது.
ஒரு வீரர் ஒரு ஓவர் பந்து வீசத் தாமதித்தால், அதற்கான தண்டனையை ICC தற்பொழுது மாற்றியமைத்துள்ளது. இதன் மூலம் அணித் தலைவருக்கு மட்டும் அல்லாமல் அணித் தலைவர் மற்றும் அணியில் உள்ள வீரர்களுக்கும் தற்போது அபராதம் விதிக்கப்படும்.
ICC-ன் தலைவர் சசாங்க் மனோகர் ஆவார். இதன் தலைமை நிர்வாக அதிகாரி மனு சவ்ஹானே ஆவார்.