பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான இந்திரா நூயி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (International Cricket Council - ICC) முதல் தனி பெண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாண்டு காலத்திற்கு தனி இயக்குநராக (Independent Director) இந்திரா நூயி நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாண்டு பதவி காலமுடைய ஒரு நியமன காலத்திற்கு இவர் மேலும் இருமுறை நியமிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக ஒருவரை 6 ஆண்டுகள் வரை தலைவராக நியமிக்கலாம் என்பது ICC-யின் நியமன விதியாகும்.
சர்வதேச அளவில் கிரிக்கெட் தொடர்பான நிர்வாக ஆளுகையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் கிரிக்கெட் சட்ட திருத்தங்களின் ஒரு பகுதியாக 2017-ஆம் ஆண்டு ICC-ஆல் தனி இயக்குநர் என்ற புதிய பொறுப்பு ஏற்படுத்தப்பட்டது.