TNPSC Thervupettagam

ICC – பிலிப்பைன்ஸ் வெளியேற்றம்

March 20 , 2018 2441 days 779 0
  • சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் (International Criminal Court -ICC) ரோம் சட்ட சாசனத்திலிருந்து (Rome Statute)  வெளியேறுவதற்கான  கடிதத்தை (Letter of Withdrawal) பிலிப்பைன்ஸ் அரசு  முறையாக சமர்ப்பித்துள்ளது.
  • இதன் மூலம் இதற்கு முன் 2017-ல் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து   வெளியேறிய புரூண்டியைத் தொடர்ந்து,  இந்நீதிமன்றத்திலிருந்து வெளியேறும் இரண்டாவது நாடாக பிலிப்பைன்ஸ் உருவாகியுள்ளது.
  • நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் சாசனத்தை பிலிப்பைன்ஸ் அரசு 2011-ஆம் ஆண்டு  பின்னேற்றது (ratified).

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்

  • போர்க்குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை  மற்றும் மனித நேயத்திற்கு எதிரான  குற்றங்கள்   புரிகின்ற தனி நபர்கள் மற்றும் அரசுகளை தண்டிப்பதற்கு நிரந்தர சர்வதேச அதிகாரமுடைய உலகின் முதல் நாடுகளுக்கிடையேயான சட்ட அமைப்பு (intergovernmental legal body) சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றமாகும்.
  • இது நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் (The Hague) நகரில் அமைந்துள்ளது.
  • இது 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றது. அத்தினத்தன்றுதான் ரோம் சட்ட சாசனம் (Rome Statute) செயல்பாட்டிற்கு வந்தது.
  • 123 நாடுகள் இந்த நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
  • இந்தியா இந்நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நிறுவன அடித்தளமாகவும், நிர்வகிப்பு ஆவணமாகவும் செயல்படுகின்ற ரோம் சட்ட சாசனமானது ஓர் பல தரப்பு ஒப்பந்தமாகும் (multilateral treaty).
  • இந்தியா இதுவரை ரோம் சட்ட சாசனத்தில் கையெழுத்திடவில்லை.
  • குற்றங்கள் புரிகின்ற தனிநபர்களை தண்டிக்கும் அதிகாரமுடைய இந்நீதிமன்றமானது ஐநா வின் ஓர் உறுப்பல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் அல்லது தனி நாடுகள் தனிப்பட்ட வகையில் இந்நீதிமன்றத்தில் புகார்களை அளிக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்