சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பிரம்மாண்டமான சாதனை படைத்ததற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ராகுல் டிராவிட் மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர் ரிக்கி பாண்டிங் ICC(International Cricket Council) வாழ்த்தரங்கத்தில் இடம் பெற்றுள்ளனர்.
டப்ளினில் நடைபெற்ற விழாவின் பொழுது, டிராவிட் மற்றும் பாண்டிங் ஆகியவர்களுடன் இங்கிலாந்தை சேர்ந்த ஓய்வுபெற்ற விக்கெட்-கீப்பர் மற்றும் மட்டைப்பந்து வீரரான க்ளேர் டெய்லா எனும் பெண்ணும் ICC வாழ்த்தரங்கத்தில் இடம் பெற்றுள்ளார்.
உயரடுக்குப் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட ஐந்தாவது இந்திய ஆட்டக்காரர் டிராவிட் ஆவார்.
மற்ற நான்கு இந்திய அணித்தலைவர்கள் - பிஷன் சிங் பேடி, சுனில் காவஸ்கர். கபில்தேவ், அனில் கும்ப்ளே.
பாண்டிங், இந்த மரியாதையைப் பெரும் 25-வது ஆஸ்திரேலிய வீரர் ஆவார்.
ICC கிரிக்கெட் வாழ்த்தரங்கம், சிறந்த ஆட்டக்காரர்களின் சாதனையை கிரிக்கெட்டின் நீண்ட மற்றும் சிறப்புமிக்க வரலாற்றின் மூலம் அடையாளம் காணுகிறது.
2 ஜனவரி, 2009ல் துபாயில் நடைபெற்ற ICC-யின் நூற்றாண்டு விழாவின் ஒருபகுதியாக சர்வேதேச மட்டைப் பந்தாளர்கள் கூட்டமைப்புடன் சேர்ந்து சர்வதேச மட்டைப்பந்து குழுமத்தினால் (Federation of International Cricketer’s Association) ICC வாழ்த்தரங்கமானது தொடங்கப்பட்டது.