கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் (Indian Council for Cultural Relation-ICCR) புதிய தலைவராக, மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவருமான வினய் சஹாஸ்ரபுத்தே நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ சமூக பணியாளர்களுக்கான தெற்காசியாவின் ஒரே பயிற்சி மற்றும் ஆராய்ச்சி அகாடமியான ராம்பாவ் மஹால்கி பிரபோதினி (Rambhau Mhalgi Prabodhini) அமைப்பின் துணைத் தலைவராகவும் சஹாஸ்ர புத்தே உள்ளார்.
கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில்
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல்கலாம் ஆசாத்தினால் 1950-ஆம் ஆண்டு ICCR அமைக்கப்பட்டது.
அபுல் கலாம் ஆசாத்தே இதன் முதல் தலைவருமாவார்.
இந்தியாவின் கலாச்சார வெளியுறவுகளோடு தொடர்புடைய திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வகுத்திடுவதிலும், அவற்றை செயல்படுத்திடுவதிலும் மிகுந்த செயற்தன்மையோடு பங்கேற்பதும், மேலும் இந்தியாவிற்கும், பிற உலக நாடுகளுக்கும் இடையே பரஸ்பர புரிதலையும், அவற்றினிடையேயான கலாச்சார உறவுகளை வளர்த்திடுவதும் வலுப்படுத்திடுவதும் இந்த கவுன்சிலின் நோக்கங்களாகும்.