TNPSC Thervupettagam

ICCR நிறுவப்பட்ட நாள் - ஏப்ரல் 09

April 17 , 2021 1231 days 418 0
  • இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான மன்றமானது (ICCR - Indian Council for Cultural Relations) தனது 71வது அறக்கட்டளை தினத்தை கொண்டாடுகிறது.
  • இது 1950 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களால் நிறுவப்பட்டது.
  • இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
  • இது இந்தியாவிற்கும் உலகிற்கும் இடையிலான கலாச்சார உறவுகள் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஆகியவற்றை வளர்ப்பது மற்றும் பலப்படுத்துவது என்ற நோக்கத்துடன் உள்ளது.
  • மற்ற நாடுகளுடனும் மக்களுடனும் கலாச்சாரப் பரிமாற்றங்களை மேம்படுத்தச் செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 1965 ஆம் ஆண்டில் இந்திய அரசால் நிறுவப்பட்ட சர்வதேச புரிதலுக்கான ஜவஹர்லால் நேரு விருதையும் நிர்வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்