TNPSC Thervupettagam
December 31 , 2017 2396 days 816 0
  • கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் (Indian Council for Cultural Relation-ICCR) புதிய தலைவராக, மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின்  தேசிய துணைத் தலைவருமான வினய் சஹாஸ்ரபுத்தே நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ சமூக பணியாளர்களுக்கான தெற்காசியாவின் ஒரே பயிற்சி மற்றும் ஆராய்ச்சி அகாடமியான ராம்பாவ் மஹால்கி பிரபோதினி (Rambhau Mhalgi Prabodhini) அமைப்பின் துணைத் தலைவராகவும் சஹாஸ்ர புத்தே உள்ளார்.
கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில்
  • சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல்கலாம் ஆசாத்தினால் 1950-ஆம் ஆண்டு ICCR அமைக்கப்பட்டது.
  • அபுல் கலாம் ஆசாத்தே இதன் முதல் தலைவருமாவார்.
  • இந்தியாவின் கலாச்சார வெளியுறவுகளோடு தொடர்புடைய திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வகுத்திடுவதிலும், அவற்றை செயல்படுத்திடுவதிலும் மிகுந்த  செயற்தன்மையோடு பங்கேற்பதும், மேலும் இந்தியாவிற்கும், பிற உலக நாடுகளுக்கும் இடையே பரஸ்பர புரிதலையும், அவற்றினிடையேயான கலாச்சார உறவுகளை வளர்த்திடுவதும் வலுப்படுத்திடுவதும் இந்த கவுன்சிலின் நோக்கங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்