உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது, 2025 ஆம் ஆண்டிற்கான, சர்வதேச நோய்கள் வகைப்பாட்டுத் தொடரின் (ICD-11) 11வது திருத்தப் பதிப்பை வெளியிட்டுள்ளது.
இது நோய்கள், காயங்கள் மற்றும் உயிரிழப்பிற்கான காரணங்களைக் கண்டறிதல், அறிக்கையிடுதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றில் உலகெங்கிலும் உள்ள சில சுகாதார வல்லுநர்கள் பயன்படுத்தும் மொழியைத் தரநிலையாக்கும் கருவியாகும்.
அதன் புதிய அம்சங்கள் ஆனது, தேசியச் சுகாதார அமைப்புகளில் (எ.கா. மேம்பட்ட இயற்கை மொழியிலான முறையாக்கம்-NLP மற்றும் செயலி நிரலாக்க இடைமுகம்-API) அடிப்படையிலான நிரலாக்க முறை) பயன்பாட்டுத் தன்மை, துல்லியத் தன்மை மற்றும் பயன்பாட்டின் எளிமை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.
ஆயுர்வேதத்தின் பாரம்பரிய மருத்துவ நிலைமைகள் மற்றும் சித்த மருத்துவம் மற்றும் யுனானி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகள் போன்ற அதனுடன் தொடர்புடைய பாரம்பரிய மருத்துவ முறைகளை உள்ளடக்கிய ஒரு மிகவும் புதிய தொகுதியானது பாரம்பரிய மருத்துவ முறைகளின் முறை சார் கண்காணிப்பை செயல்படுத்துகிறது.
இந்தியாவில், மத்திய சுகாதார நுண்ணறிவு வாரியம் (CBHI) ஆனது, ICD தொடர்பான நடவடிக்கைகளுக்கான உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்பு மையமாக செயல் படுகின்ற சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனம் ஆகும்.