பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Economic Affairs-CCEA) ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ICDS – Integrated Child Development Scheme) திட்டத்தின் கீழ் உள்ள நான்கு திட்டங்களின் தொடர்ச்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அந்த நான்கு திட்டங்களாவன,
அங்கன்வாடி சேவைகள்
இளம் பெண்களுக்கான திட்டம்
குழந்தை பாதுகாப்பு சேவைகள்(இது சப்ளா-sabla எனவும் அழைக்கப்படும்)
தேசிய குழந்தைகள் காப்பகத் திட்டம்.
இந்த முடிவின் மூலம் மத்தியத் துறை (Central Sector Scheme) திட்டமாக உள்ள தேசிய குழந்தைகள் காப்பகத் திட்டமானது (National Crèche Scheme) மத்திய நிதியுதவித் திட்டமாக (Central Sponsored Scheme) மாற்றப் படும்.
பணிபுரியும் பெண்கள் வேலைக்குச் செல்லும் போது தங்கள் குழந்தைகளை பராமரிப்பதற்கு விட்டுச் செல்லதத்தக்க நிலையுடைய பாதுகாப்பான இடத்தை ஏற்படுத்தி தருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ICDS ஆனது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் செயல்படுத்தப்படும் ஓர் மத்திய நிதியுதவித் திட்டமாகும். இத்திட்டம் அக்டோபர் 2, 1975ல் ஆரம்பிக்கப்பட்டது.