TNPSC Thervupettagam
November 18 , 2017 2565 days 3750 0
  • பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Economic Affairs-CCEA) ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ICDS – Integrated Child Development Scheme) திட்டத்தின் கீழ் உள்ள   நான்கு திட்டங்களின் தொடர்ச்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • அந்த நான்கு திட்டங்களாவன,
  1. அங்கன்வாடி சேவைகள்
  2. இளம் பெண்களுக்கான திட்டம்
  3. குழந்தை பாதுகாப்பு சேவைகள்(இது சப்ளா-sabla எனவும் அழைக்கப்படும்)
  4. தேசிய குழந்தைகள் காப்பகத் திட்டம்.
  • இந்த முடிவின் மூலம் மத்தியத் துறை (Central Sector Scheme) திட்டமாக உள்ள தேசிய குழந்தைகள் காப்பகத் திட்டமானது (National Crèche Scheme) மத்திய நிதியுதவித் திட்டமாக (Central Sponsored Scheme) மாற்றப் படும்.
  • பணிபுரியும் பெண்கள் வேலைக்குச் செல்லும் போது தங்கள் குழந்தைகளை பராமரிப்பதற்கு விட்டுச் செல்லதத்தக்க நிலையுடைய பாதுகாப்பான இடத்தை ஏற்படுத்தி தருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • ICDS ஆனது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் செயல்படுத்தப்படும் ஓர் மத்திய நிதியுதவித் திட்டமாகும். இத்திட்டம் அக்டோபர் 2, 1975ல் ஆரம்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்