TNPSC Thervupettagam

ICFAவின் முதலாவது உலக வேளாண்மைக்கான பரிசு

October 27 , 2018 2124 days 606 0
  • வேளாண் விஞ்ஞானி M.S. சுவாமிநாதன், புதுதில்லியில் இந்திய உணவு மற்றும் விவசாயக் குழுவால் (Indian Council of Food and Agriculture - ICFA) ஏற்படுத்தப்பட்ட முதலாவது உலக வேளாண் பரிசினைப் பெற்றிருக்கின்றார்.
  • குடியரசுத் துணைத் தலைவர், ICFA-வால் ஏற்பாடு செய்யப்பட்ட “சுவாமிநாதன் பருவநிலை மாற்றம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான உலகளாவிய பேச்சுவார்த்தை” என்று பெயரிடப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் இவ்விருதை வழங்கினார்.
  • மரபணுவியல், குழியமுறைப் பரம்பரையியல், கதிர்வீச்சு மற்றும் வேதியியல் முறையிலான மரபணு மாற்றவியல், உணவு மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தின் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இவரது அடிப்படையான மற்றும் செயல்முறை சார்ந்த ஆராய்ச்சிக்காக உலகம் முழுவதும் இவர் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றார்.
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தால் இவர் பொருளாதாரச் சுற்றுச் சூழலியலின் தந்தை எனப் புகழப்படுகின்றார்.
உலக விவசாயப் பரிசு
  • இந்தப் பரிசானது விவசாயத்தின் மூலமாக மனித குலத்திற்குச் சேவை புரிந்த தனிநபர்களின் சேவையை அங்கீகரித்திடும் எண்ணத்துடன் ICFA அமைப்பால் நிறுவப்பட்டிருக்கின்றது.
  • இது ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத் தொகையைக் கொண்ட ஒரு வருடாந்திர பரிசாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்