கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளமானது மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள இந்தியக் கடலோர காவல்படைக்கு (Indian Coast Guard - ICGS) அதிவேக ரோந்து கப்பலான ICGS அன்னி பெசண்டை வழங்கியது.
இந்தியக் கடலோர காவல்படைக்காக கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளத்தால் வழங்கப்படவுள்ள ஐந்து அதிவேக ரோந்து கப்பல்களின் வரிசையில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் இத்தளத்தால் வழங்கப்பட்டுள்ள 101வது போர்க்கப்பல் இதுவாகும்.
இது ஒரு நடுத்தர வரம்பு கொண்ட கப்பலாகும். இது அதிகபட்சமாக 34 நாட் வேகமுடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.