இந்திய கடலோரக் காவற் படையானது (Indian Coast Guar-ICG) ICGS ராணி ராஷ்மோனி (ICGS Rani Rashmoni) எனும் வேக ரோந்துக் கப்பலை (fast patrol vessel-FPV) ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் செயல்பாட்டிற்குத் துவக்கி வைத்துள்ளது.
இந்திய கடலோர காவற்படையின் வேக ரோந்து கப்பற் படகுகள் திட்டத்தின் தொடரில் கடலோரக் காவற் படையில் செயல்பாட்டிற்குத் தொடக்கி வைக்கப்பட்டுள்ள ஐந்தாவது மற்றும் கடைசிக் கப்பல் ICGS ராணி ராஷ்மோனி கப்பலாகும்.
ICGS ராணி ராஷ்மோனி படகானது ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தினால் (Hindustan Ship Yard Ltd) வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்டதாகும்
கொல்கத்தாவின் புகழ்பெற்ற ராணி ராஷ்மோனி அவர்களின் பெயர்கொண்டு இப்படகிற்கு ராணி ராஷ்மோனி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கண்காணிப்பு (surveillance), தேடல் மற்றும் மீட்பு (search and rescue), தடைப்படுத்துதல் (interdiction), கடத்தல் எதிர்ப்பு (anti-smuggling) மற்றும் வேட்டையாடல் எதிர்ப்பு (anti-poaching) நடவடிக்கைகள் போன்ற பலதரப்பட்ட பணிகளை இப்படகு செய்ய வல்லது.