TNPSC Thervupettagam

ICIMOD அமைப்பின் அறிக்கை

October 8 , 2022 651 days 302 0
  • தெற்காசியா மற்றும் இந்து குஷ் இமயமலை (HKH) பிராந்தியத்தில் பாலினச் சமத்துவ நிலை மற்றும் பருவநிலை மாற்றம்" என்ற அறிக்கையினை ஒருங்கிணைந்த மலைப் பிரதேச வளர்ச்சிக்கான சர்வதேச மையம் (ICIMOD) அமைப்பானது வெளியிட்டது.
  • இது வேளாண்மை, நீர் மற்றும் எரிசக்தி போன்ற பருவநிலையினால் பாதிக்கப்பட்ட துறைகளில் பாலின சமத்துவம் மற்றும் பருவநிலை மாற்றத்தின் நிலையை மதிப்பீடு செய்தது.
  • ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தியா, மாலத்தீவு, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 10 நாடுகளில் இந்த அறிக்கை மதிப்பீட்டினை மேற்கொண்டது.
  • பருவநிலை மாற்றத்தால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதை இந்த நாடுகளின் தேசியக் கொள்கை வெளிப்படுத்துகின்றன.
  • சீனா, இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட ஆண்களின் இடப் பெயர்வுகள் அதிகம் பதிவாகியுள்ளன.
  • பெண் விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக வேண்டி பிராந்திய மற்றும் தேசியக் கொள்கைகள் எதுவும் இல்லை.
  • தெற்காசியா மற்றும் இந்துகுஷ் இமயமலைப் பிராந்தியங்களில் உள்ள அரசாங்கங்களின் கொள்கை ஆவணங்கள் பாலின அடிப்படையிலான ஊதிய இடைவெளியினைச் சரி செய்வதில் எந்தவித கவனமும் செலுத்துவதில்லை.
  • பருவநிலை மாற்றத்தை மேலாண்மை செய்வதற்கான இந்தியாவின் தேசிய அளவில் நிர்ணயிக்கப் பட்ட பங்களிப்புகள் (NDC) ஆனது பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அங்கீகரித்ததாக இந்த அறிக்கை எடுத்துரைத்தது.
  • பாலின உள்ளடக்கம் மிக்க கொள்கைகளை உருவாக்க வேளாண்மை, எரிசக்தி மற்றும் நீர் வளத் துறையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கண்காணித்து மதிப்பீடு செய்யப் பரிந்துரைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்