அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து அயன மண்டல இணைப்பு ஆய்வு (Ionospheric Connection Explorer - ICON) விண்வெளி வானிலை செயற்கைக் கோளை நாசா வெற்றிகரமாக ஏவியுள்ளது.
அயன மண்டலம் என்பது பூமியின் வளிமண்டலத்தின் அடுக்கு ஆகும். இது அதிக அயனிகள் மற்றும் கட்டற்ற எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது. மேலும் இது ரேடியோ அலைகளை பிரதிபலிக்கக் கூடியது.
2 வருடங்களுக்கும் மேலாக, கீழே நிலப்பரப்பு வானிலையில் இருந்து விண்வெளி வானிலையைச் சந்திக்கும் இடமான வளிமண்டலத்தின் மாறக் கூடிய மண்டலத்தைப் பற்றிய ஆய்வை இது மேற்கொள்கின்றது.
முன்னதாக 2018 ஆம் ஆண்டில், நாசா அமைப்பானது கோல்டு என்ற செயற்கைக் கோளை ஏவியது. இது மேல் வளிமண்டலத்தை ஆய்வு செய்கிறது.