TNPSC Thervupettagam
March 9 , 2023 501 days 251 0
  • NAVDEX 23 (கடற்படைப் பாதுகாப்பு சார் கண்காட்சி) மற்றும் IDEX 23 (சர்வதேசப் பாதுகாப்பு சார் கண்காட்சி) ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இந்தியக் கடற்படை தனது ஐ.என்.எஸ் சுமேதா என்ற கப்பலினை அனுப்பியுள்ளது.
  • IDEX-UAE என்பது சர்வதேச அளவில் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த முப்படை சார்ந்த ஒரு பாதுகாப்புக் கண்காட்சியாக கருதப்படுகிறது.
  • மத்தியக் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளின் (MENA) பிராந்தியத்தில் நடைபெறும் ஒரே சர்வதேச அளவிலான பாதுகாப்புக் கண்காட்சி மற்றும் மாநாடு இதுவே ஆகும்.
  • இது உலக நாடுகளின் பாதுகாப்புத் துறையில் கிடைக்கப் பெறும் நிலம், கடல் மற்றும் வான் சார்ந்த சமீபத்திய நவீன தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்துகிறது.
  • 2014 ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் இணைக்கப் பட்ட உள்நாட்டிலேயே கட்டமைக்கப் பட்ட சாரியு ரக கடற்படைக் கடல் ரோந்துக் கப்பல்களில் 3வது கப்பல் ஐ.என்.எஸ் சுமேதா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்