பாரத் ஸ்டேட் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி, பாங்க ஆப் பரோடா, யுனியன் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி மற்றும் மகாராஷ்டிரா வங்கி ஆகியவை இந்தியக் கடன் தீர்ப்பு நிறுவனத்தின் பங்குகளுக்கான ஒரு சந்தாவினைச் செலுத்துவதாக அறிவித்து உள்ளன.
பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிதி நிறுவனங்கள் IDRCL நிறுவனத்தில் அதிகபட்சம் 49% பங்கினை மேற்கொள்ளும்.
மீதமுள்ள பங்குகளானது தனியார் துறை வங்கிகளிடம் இருக்கும்.
தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனமானது நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், கொண்டு வரப்பட்டுள்ளது.
தனியார் துறை வங்கிகள் தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தின் 51% என்ற அளவிலான பங்கினைக் கொண்டிருக்கும்.