இந்தியாவின் பாதுகாப்பிறக்கான ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IDSA – Institution for Defence Research Studies and Analysis) தலைவராக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிறுவனமானது 1965-ல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தன்னாட்சி உடைய ஆலோசனை நல்கு அமைப்பாகும்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரை இந்த நிறுவனத்தின் தலைவராக பொதுவாக நியமிப்பது வழக்கமாகும்.
வெளியுறவுச் செயலாளர் ஜெய்ஷங்கர், பாதுகாப்புத்துறை செயலாளர் சஞ்சய் மித்ரா, ஜெயந்த் பிரசாத் மற்றும் அலோக் தேப் போன்றோர் பதவி-வழி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவின் பணியாளர் பிரதிநிதியாக அசோக் K.பெஹீரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்நிறுவனத்திற்கு நிதி அளிக்கின்றது. இதன் வல்லுநர் பிரிவானது அயல்நாட்டு மற்றும் போரத்திறஞ் சார்ந்த உத்திகள் மற்றும் இராணுவம் சார்ந்த விஷயங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளும்.
1974 மற்றும் 1988-ன் அணு ஆயுத சோதனை மேற்கொளல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முக்கிய கொள்கை முன்னெடுப்புகளின் முன் அரசு இந்நிறுவனத்தினுடைய கண்ணோட்டத்தை கேட்டுப் பெறும்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமிருந்தும் நிர்வாகிகளுக்கான குறிப்பிட்ட பணிகளையும் இந்நிறுவனம் பெறும்.