TNPSC Thervupettagam
November 30 , 2017 2553 days 816 0
  • இந்தியாவின் பாதுகாப்பிறக்கான ஆய்வு மற்றும்  ஆராய்ச்சி நிறுவனத்தின் (IDSA – Institution for Defence Research Studies and Analysis) தலைவராக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த நிறுவனமானது 1965-ல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தன்னாட்சி உடைய ஆலோசனை நல்கு அமைப்பாகும்.
  • மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரை இந்த நிறுவனத்தின் தலைவராக பொதுவாக நியமிப்பது வழக்கமாகும்.
  • வெளியுறவுச் செயலாளர் ஜெய்ஷங்கர், பாதுகாப்புத்துறை செயலாளர் சஞ்சய் மித்ரா, ஜெயந்த் பிரசாத் மற்றும் அலோக் தேப் போன்றோர் பதவி-வழி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • இக்குழுவின் பணியாளர் பிரதிநிதியாக அசோக் K.பெஹீரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்நிறுவனத்திற்கு நிதி அளிக்கின்றது. இதன் வல்லுநர் பிரிவானது அயல்நாட்டு மற்றும் போரத்திறஞ் சார்ந்த உத்திகள் மற்றும் இராணுவம் சார்ந்த விஷயங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளும்.
  • 1974 மற்றும் 1988-ன் அணு ஆயுத சோதனை மேற்கொளல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முக்கிய கொள்கை முன்னெடுப்புகளின் முன் அரசு இந்நிறுவனத்தினுடைய கண்ணோட்டத்தை கேட்டுப் பெறும்.
  • மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமிருந்தும் நிர்வாகிகளுக்கான குறிப்பிட்ட பணிகளையும்  இந்நிறுவனம்  பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்