TNPSC Thervupettagam

IEA உயிரி ஆற்றல் TCP

March 7 , 2019 2092 days 671 0
  • மத்திய அமைச்சரவையானது சர்வதேச ஆற்றல் முகமையில் (IEA - International Energy Agency) TCP (தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டத்தில்) 125-வது உறுப்பினராக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இணைவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • உயிரி ஆற்றல் மீதான IEA-ன் கூட்டுச் செயல்பாட்டுத் திட்டம் என்பது நாடுகளுக்கிடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான ஒரு சர்வதேசத் தளமாகும்.
  • இது உயிரி ஆற்றல் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றில் தேசியத் திட்டங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • IEA கட்டமைப்பின் கீழ் IEA உயிரி ஆற்றல் TCP செயல்படுகிறது. இதில் 2017 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி முதல் இந்தியா “தொடர்புடைய நாடு” என்ற அந்தஸ்த்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்