மத்திய அமைச்சரவையானது சர்வதேச ஆற்றல் முகமையில் (IEA - International Energy Agency) TCP (தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டத்தில்) 125-வது உறுப்பினராக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இணைவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
உயிரி ஆற்றல் மீதான IEA-ன் கூட்டுச் செயல்பாட்டுத் திட்டம் என்பது நாடுகளுக்கிடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான ஒரு சர்வதேசத் தளமாகும்.
இது உயிரி ஆற்றல் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றில் தேசியத் திட்டங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
IEA கட்டமைப்பின் கீழ் IEA உயிரி ஆற்றல் TCP செயல்படுகிறது. இதில் 2017 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி முதல் இந்தியா “தொடர்புடைய நாடு” என்ற அந்தஸ்த்தில் உள்ளது.